டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நில அளவையர்களுக்கு பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நில அளவையர்களுக்கு பொள்ளாச்சியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி
டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நில அளவையர்களுக்கு பொள்ளாச்சியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
நில அளவை பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நில அளவையர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பொள்ளாச்சி ஆறுமுகம் நகரில் நேற்று நில அளவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நில அளவை ஆய்வாளர்கள் உதயகுமார் (கோவை), ராஜேஸ்குமார் (நீலகிரி), பிராஜிஸ் (பொள்ளாச்சி) ஆகியோர் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வரைபடம் மற்றும் பழைய, புதிய தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி நிலம் அளவீடு செய்வது குறித்து பயிற்சி அளித்தனர். கோவை உள்பட 6 மாவட்டங்களை சேர்ந்த 114 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. துணை ஆய்வாளர் தமிழ்செல்வன், குமார் மற்றும் சார் ஆய்வாளர்கள், புல உதவியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து நில அளவை அதிகாரிகள் கூறியதாவது:-
நவீன தொழில்நுட்ப கருவிகள்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 114 பேர் நில அளவையர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். நில அளவையர்களுக்கு 60 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இன்று (நேற்று) நகர நில அளவை குறித்து பயிற்சி ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. பழைய சர்வே முறை, நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் எப்படி நில அளவை மேற்கொள்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் நத்தம், கிராம, நகர நில அளவை மற்றும் மலைப்பகுதிகள், புறம்போக்கு நில அளவை உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த பிறகு அந்தந்த மாவட்டங்களில் நில அளவையர்களாக பணி அமர்த்தப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.