ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திருப்பத்தூர் அருகே உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர்.

Update: 2023-10-25 06:45 GMT

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி

திருப்பத்தூர் அருகே ஜலகாம்பாறையில் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டில் சுமார் 8 மாதங்கள் தண்ணீர் விழுந்த வண்ணம் இருக்கும். இதனால் மாவட்டத்தின் பிற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு சென்று குளித்து மகிழ்ச்சி அடைவார்கள்.

மேலும் இந்த நீர்வீழ்ச்சி ஏலகிரி மலைக்கு அருகே உள்ளதால் அங்கு வரும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து குளித்து விட்டு செல்கின்றனர்.

தொடர் விடுமுறை

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து தண்ணீர் விழுந்து கொண்டு இருக்கிறது.

இந்தநிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர்விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகளில் கடந்த 2 நாட்களாக கார், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் இங்கு வந்து நீர்வீழ்ச்சியில் குளித்து செல்கின்றனர்.

மேலும் அவர்கள் நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு அதன் அருகே உள்ள முருகர், பெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்