இளையான்குடி கார் மோதி வியாபாரி பலி

இளையான்குடி அருகே கார் மோதி வியாபாரி உயிரிழந்தார்.;

Update:2023-09-16 00:45 IST
இளையான்குடி கார் மோதி வியாபாரி பலி

இளையான்குடி,

இளையான்குடி பாவடி தெருவை சேர்ந்தவர் சகுபர் சாதிக் (வயது 40). இவர் ஆடு, மாடுகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவா் கண்ணமங்கலம் ரைஸ் மில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சகுபர் சாதிக் மீது கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைக்கு பலனின்றி சகுபர் சாதிக் பலியானார். விபத்து தொடர்பாக சகுபர் சாதிக் மனைவி அளித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்