மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update:2022-12-10 00:15 IST

கோத்தகிரி, 

மாண்டஸ் புயல் காரணமாக கோத்தகிரி பகுதியில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. கோத்தகிரி அருகே ஒன்னட்டியில் இருந்து கெங்கரை கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்தது. மேலும் மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது விழுந்ததால், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கோத்தகிரி வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து சாலையின் குறுக்கே விழுந்த மரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் மின்வாரிய பணியாளர்கள் மின் கம்பிகளை இணைத்து மின்சார வினியோகத்தை சீராக்கினர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்