அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி
அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.;
நாகை மாவட்டம் திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்மலாராணி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சங்கர் முன்னிலை வகித்தார். டேக்வாண்டோ பயிற்சியாளர் பாண்டியன் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.