பொறியாளர்கள் இடமாற்றம்
நெல்லை மாநகராட்சி பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.;
நெல்லை மாநகராட்சியில் சமீபத்தில் உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் மாற்றப்பட்ட பொறியாளர்கள் நேற்று மீண்டும் மாற்றப்பட்டு உள்ளனர். அதாவது, செயற்பொறியாளர் வாசுதேவனுக்கு திட்டப்பிரிவு பணியுடன் சேர்த்து, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளர் பணியும் கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது. பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளராக பொறுப்பு வகித்து வந்த லெனின், தச்சநல்லூர் மண்டல பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பிறப்பித்து உள்ளார்.