பாளையம் புதூர் அருகேமரங்களை வெட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Update:2023-02-05 00:15 IST

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி பாளையம் புதூர் அருகே பெருமாள் கோவில் எதிரே தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு வெட்டி சாய்த்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட சாலை பராமரிப்பு நிறுவனம் தொப்பூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மரங்களை வெட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்