நீச்சல் போட்டியில் வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை

நீச்சல் போட்டியில் வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.;

Update:2023-07-21 01:45 IST

வடக்கன்குளம்:

சென்னை வேளச்சேரியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டி நடந்தது. இதில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் ஜோஸ்வா தாமஸ், பால பொன்னி, பிரவின் குமார், ஜாய்ஸ்ரீ, வின்சியா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மாணவர்கள் ஜோஸ்வா தாமஸ் 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக், 100 மீ. பிரீஸ்டைல், 200 மீ. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியிலும், பிரவின் குமார் 100 மீ. பேக் ஸ்ட்ரோக் போட்டியிலும், ஜாய்ஸ்ரீ 100 மீ. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியிலும் தங்க பதக்கங்களை வென்றனர்.

ஜோஸ்வா தாமஸ் 3 தங்கப்பதக்கங்களும், பிரவின் குமார், ஜாய்ஸ்ரீ ஆகியோர் தலா ஒரு தங்கப்பதக்கமும் வென்றனர். மேலும் வின்சியா 100 மீ. பேக் ஸ்ட்ரோக் போட்டியில் வெள்ளி பதக்கமும், பால பொன்னி 100 மீ. ப்ரீஸ்டைல் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்