ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைணவ பேரவையின் மூன்றாம் ஆண்டு வைணவ மாநாடு நடைபெற்றது. காலையில் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கருட கொடியேற்றப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் வைணவ மாநாடு தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வைணவ அடியார்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீரங்கம் கோவில் கந்தாடை வாதுல தேசிக அண்ணன் அழகிய சிங்காரச்சாரியார், திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடம் 26-வது பட்டம் மனாதிபதி ஸ்ரீமன் உ.அ.வே. தேகளீஆசார்ய எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் மங்கள சதான உரை நிகழ்த்தி 11 பேருக்கு வைணவர் ரத்தினா விருது வழங்கி மாநாட்டு சிறப்புரையாற்றினார்.
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி திருமால் அடிகளார் குழுவினர் மற்றும் ராமானுஜம் பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். வந்தவாசி ஆசிரியர் ராமானுஜம் சங்க சீனிவாசன் நன்றி கூறினார்.