மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் சாவு

கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-09-12 17:38 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோ.நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், விவசாயி. இவரது மகன் தனசேகர் (வயது 19). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (41). விவசாயி.

இந்தநிலையில் இன்று காலை தனசேகர் சோமாசிபாடி செல்வதற்காக சோ.நம்மியந்தல் கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஐங்குணம் செல்லும் சாலையில் வந்தபோது எதிரில் சிவக்குமார் ஓட்டி வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த தனசேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்