கனமழை எதிரொலி: சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழம் சார்பில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன;

Update:2025-12-01 19:44 IST

சென்னை,

வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னை பல்கலைக்கழகம் சார்பில் இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதேபோல, கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில், அண்ணா பல்கலைக்கழம் சார்பில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்