தொடர்மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா உழவர்களைக் காப்போம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
#டெட்வா புயல் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம்
அக்டோபர் தொடங்கி, தற்போது வரையிலான #வடகிழக்கு பருவமழை கனமழையினால் சேதமடைந்துள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் & வீடுகள், மனித உயிரிழப்புகள், கால்நடை பலி ஆகியவற்றுக்கு உடனடியாக மாநிலப் பேரிடர் நிதியில் (SDRF) இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
️ வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அனைத்து இடங்களிலும் நீரை வடிய வைக்கும் பணிகளைத் தொடர்ந்து நேரடியாகக் கண்காணித்து வருகிறேன்.
முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும், மக்களைக் காக்கும்
என அதில் பதிவிட்டுள்ளார்.