வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா

Update:2023-05-17 00:15 IST

வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெற்றது. விழாவில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கரகம், காவடி, ஆயிரம் கண்பானை, மண்கலயத்தில் தீர்த்தம் மற்றும் உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிகர நிழச்சியான தேரோட்டம் கடந்த 12-ந்தேதி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். விழாவில் இறுதி நாளான நேற்று பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்