நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டையில் அண்ணா வாரச்சந்தை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்று சந்தைக்கு வழக்கத்தை விட காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. திருமண விழாக்கள் இல்லாததாக் காய்கறிகள் வரத்து அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வரத்து அதிகரிப்பால் கத்தரி, தக்காளி உள்ளிட்ட சில காய்கறிகள் கிலோ ரூ.10-க்கு விற்பனையாகின.