மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் போலீசில் புகார்

மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.;

Update:2023-03-20 23:15 IST

வாணியம்பாடி

மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த அம்பலூர், ஆவாரங்குப்பம், திம்மாம்பேட்டை, கொடையாஞ்சி, ராமநாயக்கன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் மாட்டு வண்டிகள், டிராக்டர்கள், டிப்பர் லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுக்க பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் வருவாய்த்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தலைமையில், பொதுமக்கள் அம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில், மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து நீர் ஆதாரத்தை அழிக்கும் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்