வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் சமூக நல்லிணக்க உறுதிமொழி
கண்ணமங்கலம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.;
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சி.எ.முனிசாமி முன்னிலை வகித்தார்.
இதில் துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்களை இளநிலை உதவியாளர் நித்யா வாசித்தார். கூட்டத்தில் கண்ணமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட ஒட்டர் தெரு, வசந்தம் நகர், ரிஜிஸ்டர் ஆபிஸ் நகர் உள்பட பல்வேறு இடங்களில் பழுதடைந்த நிலையில் தெரு மின் விளக்குகள் மாற்றவும், அம்பேத்கர் நகர் பகுதியில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தில் ரூ.4.67லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், ஈஸ்வரன் கோவில் தெருவில் ரூ.6.97 லட்சம் மதிப்பில் சமுதாய கழிப்பறை கட்டவும், ஆரணி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 4.37 லட்சம் மதிப்பில் புதிய உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கவும் இவை உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தொடர்ந்து கண்ணமங்கலம் முஸ்லிம் நடுநிலைப்பள்ளி, பெருமாள் கோவில், அம்பேத்கர் நகர் முருகன் கோயில், புதுப்பேட்டை மாரியம்மன் கோயில் ஆகிய வார்டு சபா கூட்டங்கள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினர்.
முடிவில் வரித்தண்டலர் வா.இந்திரா நன்றி கூறினார்.