திருச்செங்கோட்டில் பா.ஜனதா சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

Update:2023-04-27 00:15 IST

எலச்சிபாளையம்:

திருச்செங்கோட்டில் பா.ஜனதா பொருளாதார பிரிவு சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்ட தலைவர் ஏ.பி.எல்.நாகராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாதார பிரிவு துணைத்தலைவர் பழனியப்பன் கலந்து கொண்டு, நீர்மோர் பந்தலை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணன், மாவட்ட பொது செயலாளர் தினேஷ்குமார், நகர தலைவர் கோபி, மாவட்ட துணைத்தலைவர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்