நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
முக்கூடலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
முக்கூடல்:
முக்கூடல் வம்பளந்தான் முக்கில் நாம் தமிழர் கட்சி சார்பாக கனிமவள கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் தினகரன், வணிகர் பாசறை செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். தொகுதி துணைத்தலைவர் பவுல் சார்லஸ், தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், தொகுதி இணைச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி ஒருங்கிணைப்பாளர் நாகலிங்கம், தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் சக்திவேல், கடையம் ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் புஷ்பராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.