ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;

Update:2023-08-18 01:02 IST

கடையநல்லூர்:

செங்கோட்டை ஒன்றியம் பாலமார்த்தாண்டபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு பொன்விழா, ஆசிரியர் பொன்னுசிங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னாள் மாவட்ட தி.மு.க. செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான மா.செல்லத்துரை தலைமை தாங்கி, கட்சி கொடியேற்றி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர்ரஹ்மான், செங்கோட்டை தமிழ் சங்க தலைவர் ஆபத்துக்காத்தான், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஐவேந்திரன் தினேஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்