சிதிலமடைந்த சமுதாயக்கூடம் சீரமைக்கப்படுமா?

வால்பாறையில் சிதிலமடைந்த சமுதாயக்கூடம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.;

Update:2023-03-23 00:15 IST

வால்பாறை, 

வால்பாறையில் சிதிலமடைந்த சமுதாயக்கூடம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சமுதாயக்கூடம்

வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியில் நகராட்சி சார்பில் சமுதாயக்கூடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனை பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு விசேஷங்களுக்கு பயன்படுத்தி வந்தனர். ஆரம்பத்தில் நகராட்சி நிர்வாகம் சமுதாயக்கூடத்தை முறையாக பராமரித்து வந்தது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தார்கள்.

இதையடுத்து சமுதாயக்கூடத்தை பராமரிக்கும் பணி கைவிடப்பட்டதால், தற்போது கட்டிடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. சுவர்கள் விரிசல் ஏற்பட்டும், பெயர்ந்தும் ஏதேனும் நிகழ்ச்சிக்கு பயன்படுத்த கூட முடியாத நிலையில் காட்சி அளிக்கிறது. கடந்த சில மாதங்களாக பூட்டியே கிடப்பதால், பொதுமக்களுக்கு பயன்படாமல் உள்ளது.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

ரொட்டிக்கடை பகுதியில் உள்ள சிறிய சமுதாயக்கூடம் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் சார்பில் சமுதாயக்கூடத்தை சீரமைத்து கொடுத்தால், மகளிர் சுய உதவிக்குழு கூட்டங்கள் நடத்தவும், கோவில் திருவிழா நாட்களில் சமுதாயக்கூடத்தை பயன்படுத்தவும், சிறப்பு மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் உதவியாக இருக்கும்.

மேலும் அங்கு நூலகம் அமைத்து கொடுத்தால் ரொட்டிக்கடை மற்றும் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயனளிக்கும். எனவே, பயன்பாடு இன்றி மூடப்பட்டு கிடக்கும் சமுதாயக்கூடத்தை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்