பயணிடம் பணம் திருடிய பெண் கைது

சாயல்குடியில் பயணிடம் பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-06-24 00:15 IST

சாயல்குடி, 

சாயல்குடி பஸ் நிலையத்தில் பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி (வயது 45) என்பவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு பஸ் ஏறினார். அப்போது படிக்கட்டில் நின்றிருந்த மர்ம ஆசாமி அவர் வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றார். இது குறித்து சாயல்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பஸ் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது ஒரு பெண் திருடுவது தெரிய வந்தது. இது தொடர்பாக பழனியைச் சேர்ந்த பாண்டி மனைவி அழகம்மாள் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்