தூக்குப்போட்டு பெண் தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாா்.;

Update:2022-08-14 02:45 IST

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விஷ்ணம்பேட்டை ஒடமனை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி இலக்கியா(வயது23). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இலக்கியா அடிக்கடி வயிறு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த இலக்கியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குப்போட்டு கொண்டார். அப்போது வீட்டுக்கு வந்து பார்த்த கார்த்திகேயன் தூக்கில் தொங்கிய இலக்கியாவை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆஸ்பத்திரியில் இலக்கியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்