கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

கோவையில் வைரஸ் காய்ச்சல் பரவலால் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update:2023-03-07 00:15 IST

கோவையில் கடந்த சில மாதங்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதையொட்டி நேற்று கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகராட்சி பகுதியில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுப வர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மாநகராட்சியில் உள்ள 7 ஆயிரம் வீதிகளுக்கும் பணியாளர்கள் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளை சுற்றிலும், கழிவுநீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்