சேலம் அருகே நிர்வாண படத்தை வெளியிடுவதாககாதல் மனைவிக்கு மிரட்டல்; தொழிலாளி கைது

சேலம் அருகே நிர்வாண படத்தை வெளியிடுவதாககாதல் மனைவிக்கு மிரட்டல்; தொழிலாளி கைது செய்யப்பட்டார்;

Update:2023-07-04 00:58 IST

சேலம் 

சேலம் காரிப்பட்டி அருகே உள்ள பெரிய கவுண்டாபுரத்தை சேர்ந்தவர் அருள்மணி (வயது 27). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் திருப்பூரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்தனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தைஉள்ளது.

இதற்கிடையில் கடந்த ஆண்டு கணவர், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருள்மணி தனது மனைவியின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று அனுப்பினார். அதில் அவருடைய சாதி குறித்து திட்டியும், மனைவி மற்றும் அவரது தாய், தங்கை ஆகியோரது படத்தை மார்பிங் செய்து நிர்வாண படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்து உள்ளார். இதுகுறித்து அந்த பெண் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்மணியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்