வேன் மோதி தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் மீது வேன்மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-08-13 22:31 IST

திண்டுக்கல் அருகே உள்ள அகரம் கிரியம்பட்டியை சேர்ந்தவர் நாகமுத்து (வயது 39). கூலித்தொழிலாளி. நேற்று இவர், வேலை நிமித்தமாக நிலக்கோட்டைக்கு சென்றார். பின்னர் அவர், செம்பட்டி-திண்டுக்கல் சாலையில் குட்டியபட்டி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மினி வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நாகமுத்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்