வேன் மோதி தொழிலாளி பலி
சாணார்பட்டி அருகே வேன் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;
சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 65). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், கோபால்பட்டி அருகே திண்டுக்கல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினிவேன் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.