திருப்புல்லாணி அருகே உள்ள பள்ள மோர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 52). கட்டுமான தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் திருப்புல்லாணி மதகுகூட்டம் ஊருணியில் குளிக்க சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரின் மனைவி பரமேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.