தொழிலாளி தற்கொலை

நெகமம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-27 02:00 GMT

நெகமம்

நெகமத்தை அடுத்த ஏரிப்பட்டியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 45), தொழிலாளி. இவர் அடிக்கடி மதுக்குடித்துவிட்டு வீட்டு செலவுக்கு சரியாக பணம் கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவருடைய மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆறுச்சாமி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுச்சாமி பரிதாபமாக இறந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்