உலக வன நாள் விழிப்புணர்வு பேரணி

உலக வன நாள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.;

Update:2023-03-23 00:15 IST


உலக வன நாளையொட்டி கோவை அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் மரம் நடுவிழா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதனை கலெக்டர் கிராந்தி குமார் மரங்களை நட்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் உலகி மற்றும் கோவை மண்டல வனத்துறை அதிகாரி அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியானது பொதுமக்களிடையே வனபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றது. பேரணியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு வனபாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, கோஷங்களை முழங்கி சென்றனர். இப்பேரணி கல்லூரி வளாகத்தில் துவங்கி கோவை அரசு ஆஸ்பத்திரி, ரெயில் நிலையம், கலெக்டர் அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கம் வழியாக மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்