கடலூரில் உலக மன நல விழிப்புணர்வு பேரணி; கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்

கடலூரில் நடந்த உலக மன நல விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-10 19:44 GMT



உலக மனநல தினத்தை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே மனநோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை வழங்கினார். பேரணி பாரதி சாலை வழியாக சென்று கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் முடிவடைந்தது.

முன்னதாக, மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வட்டார அளவில் பொதுமக்களுக்கு மனநலம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்த மாதம் முமுவதும் நடைபெறும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

பேரணியில் நலப்பணிகள் இணை இயக்குனர் சாரா செலின்பால், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாவட்ட மனநல திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி, மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்