குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-02-09 00:08 IST

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா டி.புதூர் கிராமம், பெரியதெருவைச் சேர்ந்தவர் நிர்மல் குமார் (வயது 25). இவர் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில், நிர்மல் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்