குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது
ராணிப்பேட்டையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
ராணிப்பேட்டை காரை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாகர் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை காரை லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் நரேஷ்குமாரை (36) தாக்கி, அவரிடம் நகை, பணம் பறித்த வழக்கு மற்றும் அடிதடி, திருட்டு உள்பட 10 வழக்குகள் உள்ளது. இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட சுபாகர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சுபாகரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக அவரை குபண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுபாகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.