மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.

Update: 2023-04-14 18:12 GMT

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள தும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலத்தின் மகன் ராமகிருஷ்ணன் (வயது 22). இவர் வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்க சுவிட்ச் போட்டபோது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் அலறவே சத்தம் கேட்டு அவருடைய அக்காள் விஜயலட்சுமி ஓடி வந்து மின்சாரத்தை நிறுத்தினார். எனினும் ராமகிருஷ்ணன் அதே இடத்தில் துடி துடித்துஇறந்தார்.

இது குறித்து சேத்துப்பட்டு போலீசில் ஆதிமூலம் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்