கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் விருப்பமனு தாக்கல்
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் எம்.பி. விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.;
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக செயல்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்பையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் மே 2-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அதே நாளில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, அரசியல் கட்சிகள் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடுவது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, பல்வேறு கட்சிகளும் தங்கள் கட்சியினர் அத்தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விரும்பமனுக்களை பெற்று வருகின்றன.
அந்தவகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட அக்கட்சியின் எம்.பி. யான கார்த்தி சிதம்பரம் இன்று விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தனது விருப்பமனுவை தமிழக காங்கிரஸ்
தேர்தல் குழுவிடம் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ளார்.