தமிழகத்தில் நடந்த சோதனையில் ரூ.45½ கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் நடந்த சோதனையில் ரூ.45½ கோடி பணம், பொருட்கள் பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.

Update: 2021-03-10 22:17 GMT
சென்னை, 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பணப்பட்டுவாடா, இலவச பொருட்கள் வினியோகம் ஆகியவற்றை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான பணியில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.இந்த குழுக்கள் மேற்கொள்ளும் சோதனையில் கணக்கில் வராத பணம், தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள், மது பாட்டில்கள், போதை பொருட்கள் உள்ளிட்டவை சிக்குகின்றன. அந்த வகையில் கடந்த 9-ந் தேதி வரை ரூ.45 கோடியே 55 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்கள் பிடிபட்டுள்ளன. இதில் ரொக்கமாக பிடிபட்ட பணம் ரூ.35.31 கோடியாகும்.

இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்