தமிழ் மொழியில் தொழில்நுட்ப கல்வி கற்க நடவடிக்கை- தாராபுரம் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி

தமிழக மக்கள் இந்தியாவிற்கு என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர் தமிழ் மொழியில் தொழில்நுட்ப கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாராபுரம் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

Update: 2021-03-30 09:12 GMT
Image courtesy : ANI
சென்னை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை கோவை வரும் அவர் அங்கிருந்து கேரளா மாநிலம் பாலக்காடுச் என்ரார். அங்கு பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டத்தில் பேசினார். 

பின்னர் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார் அவருடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டார். 

தாராபுரத்தில்  நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தாராபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு வேல் பரிசாக அளிக்கப்பட்டது.

வெற்றி வேல், வீர வேல் என்று கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி அவர் பேசும் போது கூறியதாவது;-

தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது . உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

எங்கள் நோக்கம் வளர்ச்சி; காங்கிரஸ் - திமுகவின் நோக்கம் குடும்ப அரசியல்

முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து திமுக அவமதித்தது கண்டிக்கத்தக்கது.  முதலமைச்சரின் தாயையே விமர்சித்து பேசுவதா?  பெண்களை இழிவுப்படுத்திய திமுக தலைவர்களை கட்சி தலைமை கண்டிக்கவில்லை.திமுக, காங்கிரஸ் தங்கள் தலைவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.

திமுக பட்டத்து இளவரசருக்காக அக்கட்சியில் முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர் 

பெண்களை அவமதிப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம்.

தமிழக மக்கள் இந்தியாவிற்கு என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர் தமிழ் மொழியில் தொழில்நுட்ப கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்