பிரதமர் பற்றி தேர்தல் பிரசாரத்தில் விமர்சனம்: உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பிரதமர் பற்றி தேர்தல் பிரசாரத்தில் விமர்சனம் குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.;

Update:2021-04-07 02:27 IST
சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். மேலும் தமிழகமெங்கும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் மறைந்த மத்திய மந்திரிகள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோரைப் பற்றியும், பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் அவர் விமர்சித்து அண்மையில் பிரசாரம் மேற்கொண்டார். இது பிரதமருக்கு அவதூறு ஏற்படுத்துவதாக கூறி உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் 7-ந் தேதி மாலை 5 மணியளவில் அவர் தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்