காட்டில் திடீரென தோன்றிய கரடி: துணிச்சலாக செல்பி எடுத்த வீரப்பெண்
காட்டில் திடீரென வந்த கரடியை கண்டு பயப்படாமல் அதனுடன் செல்பி எடுத்த வீரப் பெண்ணை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.;
மெக்சிகோ,
மெக்சிகோவில் உள்ள சிபின்க்கில், காட்டுப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் காட்டின் இயற்கையை ரசித்தப்படியே சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு கரடி அவர்கள் முன் தோன்றியுள்ளது.
இதனையடுத்து அங்கிருந்த அனைவரும் அசையாமல் அப்படியே கல் மாதிரி நின்றனர். அப்போது, அங்கிருந்த பெண்ணின் அருகில் சென்ற கரடி, அந்த பெண்ணின் தோலில் தனது முன்னங்கால்களை வைத்துள்ளது.
அந்த திகிலூட்டும் நேரத்திலும், அஞ்சாத அந்த பெண், தனது மொபைலை எடுத்து, கரடியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் யாரையும் தாக்காமல் கரடி அங்கிருந்து சென்று விட்டது.
இந்த நிகழ்வை அங்கிருந்த மற்றொருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அது வைரலாகி உள்ளது. கரடியுடன் செல்பி எடுத்த பெண்ணின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.