அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிப்பு

அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உள்ள அதிசய பெண்

Update: 2021-03-26 15:59 GMT
லண்டன்

இங்கிலாந்தை  சேர்ந்த கிறிஸ்டி புரவுன்  (32) என்ற அந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறதாம். யாராவது கவர்ச்சியான ஒரு ஆணை பார்த்தால், அந்த பெண் மயங்கி விழுந்துவிடுவாராம். ( ஓ.. இதுதான் அழகில மயங்கிறதா...?)அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.  

கேடப்ளெக்ஸி கோளாறு காரணமாக கிர்ஸ்டி ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து முறையேனும் மயங்கி விழுந்து விடுகிறாராம். இருப்பினும், மிகவும் மோசமான நாட்களில், அவர் சுமார் 50 முறை மயங்கி விழுந்து விடுவாராம். 

கிறிஸ்டி எந்த உணர்ச்சியானாலும், அது கோபமோ, சிரிப்போ அல்லது பயமோ, ஏன் கவர்ச்சியாக இருந்தால்கூட அவரை மயங்கி விழச்செய்துவிடும்.

ஆகவே, பெரும்பாலும் கிறிஸ்டி வெளியே செல்வதே இல்லையாம். அப்படியே சென்றாலும் தலை குனிந்தே செல்கிறாராம்.தனது சோகத்தை மறைத்துக்கொண்டு, இதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது என்கிறார் கிறிஸ்டி .யாராவது என்னுடன் சண்டைக்கு வந்தால், நான் வாக்குவாதம் பண்ணத்தொடங்கியவுடனேயே மயங்கி விழுந்து விடுவேன், உடனே சண்டை நின்றுவிடும் என்கிறார் வேடிக்கையாக!

தனது மூளைக் கோளாறு தொடர்பாக பேசிய அந்த பெண், "இது மிகவும் சங்கடமாக இருக்கிறது. நான் ஒரு முறை ஷாப்பிங் செய்து கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதை கண்டேன். அவ்வளவுதான் என் கால்கள் பலவீனமாகிவிட்டன. ஆதரவுக்காக என் உறவினர் மீது சாய்ந்துகொண்டேன்" என்று டெய்லி மெயில் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.

மேலும் இந்த கோளாறு அவரை மேலும் சோர்வடையச் செய்வதாகவும். தான் ஒருபோதும் நன்கு ஓய்வெடுக்கும் வகையில் ஆழ்ந்து தூங்கியதில்லை என்றும் அதனால் எப்போதும் புத்துணர்வுடன் இருக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பொது வெளியில் செல்லும்போது தன்னை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்கவும், ஒவ்வொரு முறையும் தனது முழங்கால்கள் பலவீனமடையும் போது தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் அவர் தலைகுனிந்து தான் நடப்பாராம்.

மேலும் செய்திகள்