ஜி மெயில் ஐடி பிடிக்கலையா.. இனி அதையும் மாற்றலாம் - கூகுள் கொண்டு வந்த சூப்பர் அப்டேட்
பயனர்கள் தங்கள் கூகுள் கணக்கை அப்படியே வைத்துக்கொண்டு, யூசர் நேமில் பழைய ஜிமெயில் முகவரியை மாற்றிவிட்டு, புதிய முகவரியாக மாற்றிக்கொள்ளலாம்.;
Image Courtesy: Grok AI
இ மெயில் எனப்படும் மின்னஞ்சல் பயனபடுத்தாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது இ மெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அடுத்த நொடியே இ மெயில் வாயிலாக புகைப்படங்கள், கோப்புகள், மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை அனுப்ப முடியும். பல்வேறு தளங்கள் இ மெயில் சேவை வழங்கினாலும் கூகுளின் இ மெயில் (ஜி மெயில்) தான் இதில் முதலிடம் வகிக்கிறது.
உலகம் முழுவதும் சுமார் 180 கோடி ஜிமெயில் கணக்குகள் உள்ளன. பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் புதிய அப்டேட் ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, பயனர்கள் தங்கள் கூகுள் கணக்கை அப்படியே வைத்துக்கொண்டு, யூசர் நேமில் பழைய ஜிமெயில் முகவரியை மாற்றிவிட்டு, புதிய முகவரியாக மாற்றிக்கொள்ளலாம். ஜிமெயில் ஐடி அட்ரஸ் மாற்றினாலும் பெரிய சிக்கல் ஏற்படாது எனவும், பழைய மற்றும் புதிய ஜிமெயில் முகவரிகளுக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களுமே இன்பாக்ஸிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்கள் ஜிமெயில் முகவரியை மாற்றிய பிறகு, அடுத்த ஓராண்டுக்கு புதிய முகவரியை மாற்றவோ அல்லது நீக்கவோ முடியாது என்ற கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்படும். இந்த வசதியை படிப்படியாக அறிமுகம் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஜிமெயில் முகவரி மாற்றினாலும் மெயிலில் உள்ள தரவுகள், புகைப்படங்கள் எந்த பாதிப்பும் இன்றி இருக்கும் எனவும் யூடியூப், டிரைவ் உள்ளிட்டவைகளை அணுகுவதிலும் எந்த சிரமும் இருக்காது என கூகுள் தெரிவித்துள்ளது.