அதிகாலை பனியால் அடுத்தடுத்து மோதிய கார்கள் - 3 பேர் பலி

அதிகாலை நிலவிய பனியால் வெளிச்சமின்மை காரணமாக அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-12-22 09:48 GMT
லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் டிசம்பர் மாத தொடக்கம் முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்பட பல்வேறு தரப்பினர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரில் உள்ள பாபு சாபு வாகன சுங்கச்சாவடி பகுதியில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

கடுமையான பனியால் வெளிச்சமின்மை காரணமாக மூன்று கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்