நாடு தழுவிய போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு

முழு தேசமும் அதன்உரிமைகளுக்காக எழுந்து நிற்க வேண்டும் என இம்ரான்கான் கூறியுள்ளார்.;

Update:2025-12-21 20:28 IST

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இதற்கிடையே நேற்று தோஷகானா கானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில் நாடு தழுவிய போராட்டங்களுக்குத் தயாராகும்படி இம்ரான் கான் தனது கட்சி யினர் மற்றும் ஆதரவா ளர்களுக்கு - அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இம்ரான்கானின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், கைபர் மாகாண போராட் பக்துன்க்வா முதல்-மந்திரி சோஹைல் அப்ரிடிக்கு டத்திற்குத் தயாராகும்படி நான் ஒரு செய்தியை அனுப்பியுள்ளேன். முழு தேசமும் அதன்உரிமைகளுக்காக எழுந்து நிற்க வேண்டும். இந்தத் தீர்ப்பு எந்த ஆதாரமும் இல்லாமல், சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் நீதிபதி யால் அவசரமாக வழங்கப் பட்டது. இவ்வழக்கில் எனது சட்டக் குழுவின் வாதங்கள் கேட்கப்படவே இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்