ரஷியாவுக்கு படிக்க சென்ற குஜராத் மாணவன் ராணுவத்தில் சேர்ப்பு - மீட்கக்கோரி வீடியோ வெளியீடு

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 397வது நாளாக போர் நீடித்து வருகிறது.;

Update:2025-12-22 07:01 IST

கீவ்,

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 397வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ரஷியாவுக்கு படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிக சம்பளம் போன்ற ஆசைகளால் படிக்க செல்லும் மாணவர்கள் பலர் ராணுவத்தில் சேரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த முகமது ஹுசைன் என்ற மாணவர் ரஷியாவுக்கு உயர் கல்வி படிக்க சென்றுள்ளார். ஆனால், அவர் ரஷிய ராணுவத்தில் சேர்ந்த நிலையில் போரில் உக்ரைன் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது உக்ரைனில் கைதியாக உள்ள முகமது ஹுசைன் தன்னை மீட்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முகமது உக்ரைன் ராணுவத்தின் பிடியில் உள்ள நிலையில் அவர் பேசும் வீடியோவை உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்