வங்காளதேசத்தில் பயங்கரவாத குழுக்கள் இடையே துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

வங்காளதேசத்தில் பயங்கரவாத குழுக்கள் இடையே துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாயினர்.;

Update:2023-07-08 01:33 IST

வங்காளதேசத்தில் அரகான் ரோஹிங்கியா சால்வேசன் ராணுவம், அரகான் ஒற்றுமை அமைப்பு போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. அங்கு காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமை கைப்பற்றுவது தொடர்பாக இரு பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இதனால் சமீப காலமாக இரு தரப்பினரும் அடிக்கடி மோதி கொள்கின்றனர்.

இந்தநிலையில் இரு பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் மாறிமாறி தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்