2-வது நாளாக தைவான் எல்லையில் சீனா போர்ப்பயிற்சி

தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி அவ்வப்போது போர்ப்பதற்றத்தை சீனா ஏற்படுத்துகின்றது.

Update: 2024-05-24 04:03 GMT

தைபே நகரம்,

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் தைவானை இன்னும் தங்களது நாட்டின் ஒரு அங்கம் என சீனா கருதுகிறது. எனவே தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா துடிக்கிறது. இதற்காக தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி அவ்வப்போது போர்ப்பதற்றத்தை ஏற்படுத்துகின்றது.

இந்தநிலையில் தைவானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா 2-வது நாளாக போர்ப்பயிற்சிகளை நடத்தி உள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு தைவான் அதிபர் லாய் சிங்-தே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கையை சீனா கைவிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சூழலில், தைவானின் பிரிவினைவாத நடவடிக்கைக்கு தண்டனையாக இந்த 2 நாள் போர் ஒத்திகையைத் தொடங்கியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. 2 நாள் போர் ஒத்திகை பயிற்சியில் ராணுவம், கடற்படை, விமானப் படை,  ஆகியவை பங்கேற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்