மோடி செல்லும் இடமெல்லாம் 'ராக்ஸ்டார்' போன்ற வரவேற்பு - ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்

ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் வரவேற்றார்.

Update: 2023-05-23 10:19 GMT

Image Courtesy : PTI

சிட்னி,

பிரதமர் மோடி ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடந்த 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதன் முதல் பகுதியாக, அவர் கடந்த கடந்த 19-ந்தேதி ஜப்பான் சென்றார்.

இதில், ஜி-7 மற்றும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியாவுக்கு கடந்த 21-ந்தேதி புறப்பட்டு சென்றார். அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபே உடன் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் 3-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த பயணம் வருகிற 24-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் வரவேற்றார். சிட்னி நகரின் குடோஸ் பேங்க் அரீனா பகுதிக்கு இருவரும் சென்றடைந்த பின்னர், இந்திய வம்சாவளியினர் முன் பிரதமர் மோடி உரையாற்றினார்.

முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி கூறும்போது, "பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் அவருக்கு 'ராக்ஸ்டார்' போன்ற வரவேற்பு கிடைக்கிறது. கடந்த முறை இதே மேடையில் கடைசியாக காணப்பட்டவர் அமெரிக்க பாடகர் புரூஸ் ஸிபிரிங்ஸ்டீன். பிரதமர் மோடிக்கு கிடைத்த அளவுக்கு அப்போது அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. பிரதமர் மோடியே தலைவர்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்