எத்தியோப்பியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 257 ஆக உயர்வு
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது.;
Image Courtesy : AFP
அடிஸ் அபாபா,
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பெய்து வரும் கனமழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனை தொடர்ந்து அங்குள்ள கெஞ்சோ ஷாச்சா கோஸ்டி நகரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஏராளமானோர் உயிருடன் புதையுண்டனர். இதனையடுத்து மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணியில் அவர்களது உறவினர்கள் ஈடுபட்டனர்.
அப்போது மீண்டும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் மண்ணில் புதையுண்டனர். இதனையடுத்து அங்கு மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். மேலும் பலர் மண்ணில் புதையுண்டு இருப்பதால் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது.