கடவுளின் தூதரை அவமதிக்கும் வகையிலான புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மாணவனுக்கு மரண தண்டனை

மதக்கடவுளின் தூதரை அவமதிக்கும் வகையிலான புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-09 05:20 GMT

லாகூர்,

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இஸ்லாமிய மதக்கடவுள் குறித்து, மதக்கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்தால், அவமதித்தால் மற்றும் மத நிந்தனையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் அமலில் உள்ளது.

இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதரை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவன் இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்துகள் இடம்பெற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். அதை 17 வயதான சிறுவனும் பகிர்ந்துள்ளான். 2022ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பஞ்சாப் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மதக்கடவுள்  இறைதூதர் குறித்து அவதூறு கருத்துகள் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த வழக்கில் 22 வயது மாணவன், 17 வயது சிறுவன் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் 22 வயது சிறுவனுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்