2,777-வது பிறந்த நாள் கொண்டாடிய ரோம் நகரம்

ரோம் நகரத்தின் 2,777-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.;

Update:2024-04-23 04:36 IST

image courtesy: AFP

ரோம்,

இத்தாலியின் தலைநகரமான ரோம் நகரத்தின் 2,777-வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அங்கு இசைக்கச்சேரி, கண்காட்சி என ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரமாண்ட அணிவகுப்பும் நடைபெற்றது.

இதில் பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு உற்சாகமாக நடனம் ஆடினர். இதனால் நகரமெங்கும் விழாக்கோலம் பூண்டது. ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அங்கு சென்று இதனை கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்