இலங்கைக்கு வழங்கப்படும் சர்வதேச நிதியத்தின் நிதி பயன்பாட்டை மேற்பார்வையிட குழு

இலங்கைக்கு வழங்கப்படும் சர்வதேச நிதியத்தின் நிதி பயன்பாட்டை மேற்பார்வையிட குழுவை ரணில் விக்ரமசிங்கே அமைத்தார் .

Update: 2023-04-02 22:22 GMT

கோப்புப்படம்

கொழும்பு,

பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இலங்கைக்கு சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் வழங்குகிறது. இதற்கான ஒப்புதலை ஐ.எம்.எப்.பின் நிர்வாகக்குழு சமீபத்தில் வழங்கி உள்ளது.

நீண்ட பேச்சுவார்த்தைக்குப்பின் வழங்கப்படும் இந்த கடனை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்த இலங்கை முடிவு செய்துள்ளது. அத்துடன் இந்த பயன்பாட்டை மேற்பார்வையிட சிறப்புக்குழு ஒன்றும் நிறுவப்பட்டு உள்ளது.

அதன்படி இலங்கை மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்கே மற்றும் கரூவூலத்துறை செயலாளர் மகிந்த சிறிவர்தனா உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அமைத்துள்ளார்.

ஐ.எம்.எப்.பின் நடைமுறைகள் மற்றும் கடன் கொள்கைகளை மேற்பார்வையிடுவதும், ஐ.எம்.எப்.பின் விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதும் இந்த கமிட்டியின் பிரதான பணிகள் ஆகும்.

மேலும் இது தொடர்பாக அதிபர் மற்றும் நாடாளுமன்றத்துக்கு இந்த கமிட்டி அவ்வப்போது அறிக்கையும் அளிக்கும் என இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்